Saturday, December 4, 2010

எழுத்துக் காதல்

எழுத்துக் காதல்

மெய்யெழுத்தாய்
மெய்மறந்துக் கிடந்த
என்னுடன் புணர்ந்து
உயிரூட்டிய
உயிரெழுத்தே...!
நாமிருவரும்
உயிர்மெய்யாய்
இணைந்து விட்டோம்
இடையில்
எங்கிருந்து வந்தது...?
சாதியெனும்

ஆய்த எழுத்து...

4 comments:

  1. அதுதான் நம் நாட்டின் சாபக்கேடு!!

    நட்புடன்...
    "நந்தலாலா" இணைய இதழ்,
    nanthalaalaa.blogspot.com

    ReplyDelete
  2. "நந்தலாலா" தங்கள் கவிதைகளை எதிர்பார்க்கிறது!!

    நட்புடன்...
    "நந்தலாலா" இணைய இதழ்,
    nanthalaalaa.blogspot.com

    ReplyDelete
  3. கவிஞர்களின் சிந்தனை காதலைத் தாண்டி வர முடியாமல் இருப்பதற்கு, இது இன்னுமொரு எடுத்துக்காட்டு! (காதல் தான் வாழ்க்கை; காதலில்லாமல் உலகமில்லை என்று தயவுசெய்து காரணம் காட்டிவிடாதீர்கள்)

    புணர்ந்தபின் ஜாதி நுழைந்தால், அந்த உயிர்மெய்களுக்கு இடையே புரிதல் இல்லை என்பதை அர்த்தப்படுத்தும். அங்கே ஜாதி என்ன, அதுபோல இன்னும் ஆயிரம் சமூக கேடுகள் நுழைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

    ReplyDelete
  4. அன்பு என்னும் அற்புத உணர்வு தான் காதல்.

    அதற்கு தமிழ் எழுத்துக்கள் என்றோ மதி மயங்கி விட்டது.

    ReplyDelete