இதுவரை தமிழ்த்திரையில் ஒலிக்காத நந்தலாலா என்றெல்லாம் கூற முடியாது. ஆனால் படம் அருமை. என்னை வெகுவாகவே பாதித்தது.
சிறப்பம்சங்கள்:
- மிஷ்கின், சிறுவன், லாரி டிரைவர், மாற்றுத்திறனாளி, பள்ளிக்கூட மாணவி ஆகியோரின் நடிப்பு.
- ஒளிப்பதிவு. மகேஷ் முத்துசாமி.
- காட்சியமைப்புகள்
- கதையோட்டம்
- வசனங்கள் (சில இடங்களில்); வசனமின்மை (சில இடங்களில்)
- பாடல்கள் நிறைய இல்லாமை
- ஸ்னிக்தாவைக் கவர்ச்சியாகக் காட்டாதது
- மணிமுடியாக இசைஞானியின் இசைப் பிரவாகம்
மிஷ்கினுக்குக் கேள்விகளாக..,
- ஏன் உங்கள் படங்களில் முதன்மை பாத்திரங்கள் எல்லாம் மன நலம் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்?
- ஏன் இத்தனை நாட்களாகப் படத்தை வெளியிடவில்லை?
- ஏன் ஒவ்வொரு படத்திற்கும் இவ்வளவு இடைவெளி
அடுத்து இப்படம் ஏதோ ஜப்பானியப் படத்தின் தழுவல் என்றும், சாதாரண ரசிகர்களுக்குப் புரியாது என்பது போன்ற தோற்றத்தை ஊடகங்கள் உண்டாக்கி வைத்திருக்கின்றன. எல்லோருக்குமே புரியுமே.
வெறும் அடிதடி, ஆபாசம், வெட்டுக்குத்து, குத்துப்பாட்டு, நாராசமான நகைச்சுவை என்று மட்டுமே பார்த்து வெறுத்துப் போயிருக்கும் ரசிகர்களின் ரசனையை மாற்றுங்கள். அதற்கு இம்மாதிரி படங்களை அனைவரும் பார்க்கும் விதமாக ஊக்கப்படுத்துங்கள்.
மேலும், மிஷ்கினுக்குத் தனி ஷொட்டு. பாரதியாரின் கவிதை வரிகளையே தொடர்ந்து தன் படங்களுக்குத் தலைப்பாக வைப்பதற்கு. தொடரவும்.
No comments:
Post a Comment